

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி டர்போ 5 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் போன்களையும் அறிமுகம் செய்கிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்தியாவில் ரெட்மி டர்போ 5 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனாக வெளிவந்துள்ளது. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்டில் கிடைக்கிறது. கருப்பு, நீலம், வெள்ளை என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
ரெட்மி டர்போ 5: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.59 இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே
>> மீடியாடெக் டிமான்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 50 + 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
>> 20 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 8, 12 ஜிபி ரேம்
>> 256 ஜிபி ஸ்டோரேஜ்
>> 7540mAh பேட்டரி
>> 100 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
>> ரிவர்ஸ் சார்ஜிங் அம்சம்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.37,999 முதல் தொடங்குகிறது