

சென்னை: ஒப்போ கே14எக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் ‘K’ சீரிஸ் போன்களின் வரிசையில் ‘கே14எக்ஸ்’ வெளிவந்துள்ளது. சிறந்த பேட்டரி லைஃப் கொண்ட போனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு சரியான சாய்ஸாக இந்த போன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் பட்ஜெட் செக்மென்ட்டில் சந்தையில் அறிமுகமாகி உள்ளது.
ஒப்போ கே14எக்ஸ் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
50 + 2 மெகாபிக்சல் என பின்பக்கத்தில் இரண்டு கேமரா உள்ளது
5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
4ஜிபி / 6ஜிபி ரேம்
128ஜிபி ஸ்டோரேஜ்
இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
6500 mAh பேட்டரி
45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
5ஜி நெட்வொர்க்
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
இந்த போனின் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது