ரூ.1-க்கு ‘ஃப்ரீடம் பிளான்’ சிறப்பு திட்டம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

ரூ.1-க்கு ‘ஃப்ரீடம் பிளான்’ சிறப்பு திட்டம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு ‘ஃப்ரீடம் பிளான்’ என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் நிருபர்களிடம் பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி தலைமை பொது மேலாளர் சுதாகர ராவ் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியது: “உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘மெய்ட் இன் பாரத்’ 4-ஜி தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் விரைவாக செயல்படுத்துகிறது. இது, இந்தியாவின் தன்னிறைவு மற்றும் உள்நாட்டு டிஜிட்டல் கட்டமைப்பு நோக்கத்தை வலுசேர்க்கும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை தொலைபேசி பகுதிகளில் மொத்தம் உள்ள 1,902 (2 ஜி மற்றும் 3 ஜி ) கோபுரங்களில், 1,214 இடங்களில் ஏற்கெனவே 4-ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களிலும் அடுத்த 6 மாதங்களில் 4-ஜி சேவை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக மேம்படுத்தப்பட்ட பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் செயலி (BSNL Selfcare செயலி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், முன்பணம் ரீசார்ஜ் செய்வது, லேண்ட் லைன், எஃப்டிடிஎச் (FTTH ) மற்றும் போஸ்ட் பெய்ட் கட்டணங்களை செலுத்துவது, கணக்குப் பயன்பாடு மற்றும் திட்ட விவரங்களை அறிந்து கொள்வது, புகார் பதிவு செய்வது, புதிய அதிவேக இணைப்புக்கு பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பெற முடியும். மேலும், இந்தசெயலி 13 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிஎல்என்எல் நிறுவனம் புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. ஒரு ரூபாய்க்கு ‘Freedom Plan’ என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, அதிவேக இணைய சேவை வழங்கப்படுகிறது.

புதிய வாடிக்கையாளர்களுக்காக, ஒரு ரூபாய்க்கு “Freedom Plan” என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி ஒரு ஜிபி டேட்டா, தினசரி, 100 எஸ்எம்எஸ் மற்றும் 24 நாட்கள் செல்லுபடியாகும் காலம் வழங்கப்படுகிறது. இச்சலுகை செப்.12 வரை கிடைக்கும்.” என்று பொது மேலாளர் சுதாகர ராவ் கூறினார்.

ரூ.1-க்கு ‘ஃப்ரீடம் பிளான்’ சிறப்பு திட்டம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு
“விவசாயிகள் பாவம் சும்மா விடாது” - முதல்வர் விஜய்க்கு செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in