வாட்ஸ்அப் மெசேஞ்சருக்கு போட்டியாக மஸ்க்கின் ‘எக்ஸ் சாட்’ அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்ன?

வாட்ஸ்அப் மெசேஞ்சருக்கு போட்டியாக மஸ்க்கின் ‘எக்ஸ் சாட்’ அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்ன?
Updated on
2 min read

சென்னை: மெட்டாவின் வாட்ஸ்அப் மெசேஞ்சருக்கு போட்டியாக எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தின் மூலம் ‘எக்ஸ் சாட்’ என்ற புதிய மொபைல் போன் மெசேஜிங் செயலியை அறிமுகம் செய்துள்ளார். இப்போது இது சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது. இந்த செயலியின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

இந்த எக்ஸ் சாட் செயலியை இப்போதைக்கு ஆப்பிள் போன்களை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் இந்த செயலி அறிமுகமானது. இப்போது அமெரிக்க அளவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் ChatGPT, Claude உள்ளிட்டவற்றை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் இந்த செயலி இடம்பிடித்துள்ளது.

எக்ஸ் சாட்? - எக்ஸ் சாட் மூலம் பயனர்கள் மெசேஜிங், ஃபைல் ஷேரிங், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள், குரூப் சாட் மேற்கொள்ள முடியும். இப்போதைக்கு இந்த செயலியை எக்ஸ் தள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த செயலி ஆப்பிள் போன் பயனர்களுக்கு கடந்த ஏப்.24-ல் அறிமுகமானது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எக்ஸ் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த செயலியை முதலில் பீட்டா வெர்ஷனில் குறிப்பிட்ட பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் எக்ஸ் நிறுவனம் வழங்கியது. அவர்கள் கொடுத்த பரிந்துரைகளின் படி மாற்றங்களை மேற்கொண்டு தற்போது பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளது எக்ஸ் சாட்.

  • எக்ஸ் சாட்: சிறப்பு அம்சங்கள் என்ன?

  • இந்த செயலியில் ‘எண்டு-டூ-எண்ட்’ என்கிரிப்ஷன் அம்சம் உள்ளது. இதன் மூலம் மெசேஜை அனுப்பும், பயனர் தவிர வேறு யாரும் அதை ஆக்சஸ் செய்ய முடியாது என எக்ஸ் தெரிவித்துள்ளது. இதில் PIN அம்சம் இருப்பதாகவும் எக்ஸ் கூறியுள்ளது

  • 481 பேர் வரை ஒரு குழுவில் எக்ஸ் சாட் செயலி மூலம் உரையாடலாம்

  • இதில் விளம்பரம் என்பது இருக்காது என எக்ஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அதற்கென பிரத்யேக கொள்கை முடிவையும் பகிர்ந்துள்ளது

  • இந்த செயலியில் பயனர்களை மறைமுகமாக டிராக் செய்யும் நடவடிக்கை எதுவும் இருக்காது என்றும் எக்ஸ் கூறியுள்ளது

  • மிகவும் எளிதான வகையில் பயனர் அனுபவம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இதை எக்ஸ் வடிவமைத்துள்ளது

  • இதில் மெசேஜ்கள் தானாகவே மறைந்து போகும் Disappearing Messages அம்சம் உள்ளது

  • மேலும், பயனர்கள் மெசேஜ்களை எடிட் செய்யும் அம்சமும் உள்ளது. இதில் ஸ்க்ரீன் ஷாட்கள் எடுக்க முடியாது

  • 46 உலக மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்

  • எக்ஸ் தளத்தில் உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்

  • மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களின் தகவல் தொடர்பு விவரங்களை சேமித்து, பகுப்பாய்வு செய்து, அதை விர்ச்சுவலாக அக்சஸ் செய்யவும் முடியும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் எக்ஸ் சாட் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

வாட்ஸ்அப் மெசேஞ்சருக்கு போட்டியாக மஸ்க்கின் ‘எக்ஸ் சாட்’ அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்ன?
“பொறுமையை சோதிக்கிறது... புனிதம் காக்கப்பட வேண்டும்” - ஐபிஎல் குறித்து கவாஸ்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in