100+ விஞ்ஞானிகள் விலகல்: இஸ்ரோ விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு

100+ விஞ்ஞானிகள் விலகல்: இஸ்ரோ விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு
Updated on
1 min read

புதுடெல்லி: இஸ்​ரோ​வில் இருந்து விஞ்​ஞானிகள் தொடர்ந்து விலகி வரு​வதை அடுத்​து, அவர்​களது விருப்ப ஓய்வு மற்​றும் ராஜினாமா விதி​களை மத்​திய அரசு கடுமை​யாக்கி உள்​ளது.

இந்​தி​யா​வின் மிக முக்​கிய விண்​வெளித் திட்​ட​மான ‘ககன்​யான்’ (மனிதனை விண்​வெளிக்கு அனுப்​பும் திட்​டம்) மற்​றும் இதர முக்கியத் திட்​டங்​களில் பணி​யாற்​றும் ‘குரூப் ஏ’ பிரிவு விஞ்ஞானிகள் மற்​றும் தொழில்​நுட்ப வல்​லுநர்​களின் ராஜி​னாமா அல்​லது விருப்ப ஓய்வு கடிதங்​களை இனி வழக்​க​மான நடை​முறை​யாக ஏற்று ஒப்​புதல் அளிக்​கக் கூடாது என்று இஸ்​ரோ​வின் முக்​கிய மையங்​களுக்கு மத்​திய விண்​வெளித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்​பி​யுள்​ளது.

கடந்த 2020ம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்ட விதி​யின்​படி, இஸ்ரோவின் அந்​தந்த விண்​வெளி மைய இயக்​குநர்​களே விஞ்ஞானிகளின் ராஜி​னாமா மற்​றும் விருப்ப ஓய்வு கடிதங்​களை ஏற்று ஒப்​புதல் அளிக்க அதி​காரம் வழங்​கப்​பட்​டிருந்​தது.

ஆனால், தற்​போது ஏற்​பட்​டுள்ள விஞ்​ஞானிகளின் தொடர் வில​கல் காரணமாக தேசிய முக்​கி​யத்​து​வம் வாய்ந்த திட்​டங்​கள் பாதிக்கப்படு​வதைத் தவிர்க்​கும் வகை​யில், இந்த அதி​காரம் மீண்டும் மத்​திய விண்​வெளித் துறை​யின் (DoS) நேரடி கட்டுப்பாட்டிற்கே கொண்டு வரப்​பட்​டுள்​ளது.

பெங்​களூரு யூ.ஆர்.ராவ் செயற்​கைக்​கோள் மையம், திருவனந்தபுரம் விக்​ரம் சாரா ​பாய் விண்​வெளி மையம் உள்ளிட்ட அனைத்து இஸ்ரோ மையங்​களுக்​கும் இந்த புதிய உத்​தரவு பிறப்பிக்கப்பட்டுள்​ளது. இனி விஞ்​ஞானிகளின் ராஜி​னாமா கடிதங்களை இறுதி ஒப்​புதலுக்​காக, அந்​தந்த மைய இயக்குநர்களின் தெளிவான பரிந்​துரைகளு​டன் விண்வெளித் துறைக்​கு அனுப்​ப வேண்டியது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

100+ விஞ்ஞானிகள் விலகல்: இஸ்ரோ விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு
சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஆகஸ்ட் 15 வரை டெல்லி செங்கோட்டை மூடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in