

சென்னை: Mivi நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனான Mivi One 5ஜி போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
இந்திய நிறுவனமான Mivi சந்தையில் பட்ஜெட் விலையில் இயர்போன்கள், சவுண்ட்பார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
வரும் அக்டோபர் 8-ம் தேதி Mivi நிறுவனத்தின் One 5ஜி போன் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த போன் மூன்று விதமான ரேம் வேரியன்டில் அறிமுகமாகி உள்ளது. 5 வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும், பயனர்களுக்கு கூடும் பலன்களாக 5,000ஜிபி கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ், ஓராண்டுக்கு கேன்வா புரோ சந்தா, 18 மாதங்களுக்கு கூகுள் Gemini புரோ, ஒரு மாதத்துக்கு ஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் சந்தாவையும் அறிவித்துள்ளது.
Mivi One 5ஜி ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
>> 6.75 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
>> ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட்
>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
>> 4, 6, 8 ஜிபி ரேம்
>> 128 ஜிபி ஸ்டோரேஜ்
>> 6,000mAh பேட்டரி
>> 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
>> 5ஜி நெட்வொர்க்
>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்
>> இந்த போனின் விலை ரூ.14,999
>> இருப்பினும் ஃபிளிப்கார்ட் ‘பிக் பில்லியன் டே’ சிறப்பு விலையாக ரூ.11,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.