Lava Bold N4 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன்

லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன்

Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய சந்தையில் லாவா போல்ட் என்4 புரோ போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகி உள்ளது. வரும் செப்டம்பர் 26 முதல் இந்த போனின் விற்பனை சந்தையில் தொடங்குகிறது.

லாவா போல்ட் என்4 புரோ: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.75 இன்ச் ஹெச்டி+ எல்சிடி டிஸ்பிளே ஸ்க்ரீன்

>> Unisoc T8200 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 6 ஜிபி ரேம்

>> 128 ஜிபி ஸ்டோரேஜ்

>> 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

>> 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

>> 6,000mAh பேட்டரி

>> 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.13,999 என அறிவிக்கப்பட்டுள்ளது

<div class="paragraphs"><p>லாவா போல்ட் என்4 புரோ ஸ்மார்ட்போன்</p></div>
“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in