இந்தியாவில் பட்ஜெட் விலையில் Lava Bold N2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் பட்ஜெட் விலையில் Lava Bold N2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா போல்ட் என்2 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய சந்தையில் லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. லாவா நிறுவனம் போல்ட் என் சீரிஸ் வரிசையில் போன்களை வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே லாவா போல்ட் என்1, என்2 புரோ, என்2 லைட் உள்ளிட்ட போன்கள் இந்த வரிசையில் வெளிவந்துள்ளது.

லாவா போல்ட் என்2 ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

>> 6.75 ஹெச்டி+ நாட்ச் டிஸ்பிளே

>> Unisoc T8200 சிப்செட்

>> ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

>> 4ஜிபி ரேம்

>> 64ஜிபி ஸ்டோரேஜ்

>> 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா

>> 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

>> 6,000mAh பேட்டரி

>> 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

>> 5ஜி நெட்வொர்க்

>> யுஎஸ்பி டைப்-சி போர்ட்

>> இந்த போனின் விலை ரூ.12,999 என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் பட்ஜெட் விலையில் Lava Bold N2 ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Obsession: உலக அளவில் வசூல் குவித்து வரும் திகில் படம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in