Lava Bold N2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Lava Bold N2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா போல்ட் என்2 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா போல்ட் என்2 புரோ மற்றும் லாவா போல்ட் என்2 லைட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. கடந்த மாதம் லாவா போல்ட் 2 போன் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது. இந்நிலையில், தற்போது அதன் அடுத்த பதிப்பாக லாவா போல்ட் என்2 புரோ மாடல் போன் வெளிவந்துள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு இது சரியான சாய்ஸாக இருக்கும்.

லாவா போல்ட் என்2 புரோ சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.75 இன்ச் டிஸ்பிளே

  • Unisoc T7250 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • 4ஜிபி ரேம்

  • 128ஜிபி ஸ்டோரேஜ்

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 5,000 mAh பேட்டரி

  • 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.7,999 முதல் தொடங்குகிறது

Lava Bold N2 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
பட்ஜெட் விலையில் Redmi 15A ஸ்மார்ட்போன் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in