Lava Blaze Duo 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

Lava Blaze Duo 3 ஸ்மார்ட்போன்

Lava Blaze Duo 3 ஸ்மார்ட்போன்

Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா Blaze Duo 3 போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் சீரிஸ் போனின் வரிசையில் ‘லாவா Blaze Duo 3’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

கடந்த 2024 இறுதியில் மாதம் லாவா Blaze Duo அறிமுகமாகி இருந்தது. இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக ‘லாவா Blaze Duo 3’ அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் 1.6 இன்ச் AMOLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பயனர்கள் பின்பக்க கேமராவை கொண்டு செல்ஃபி ப்ரிவ்யூ, நோட்டிபிகேஷன்களை பார்க்கவும், மியூசிக் கன்ட்ரோல் செய்வது உள்ளிட்ட டாஸ்குகளை மேற்கொள்ளலாம்.

லாவா Blaze Duo 3 சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

  • மீடியாடெக் டிமான்சிட்டி 7060 சிப்செட்

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள பிரதான கேமரா

  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

  • 5,000 mAh பேட்டரி

  • 33 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் கிடைக்கிறது

  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்

  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

  • 6ஜிபி ரேம்

  • 128ஜிபி ஸ்டோரேஜ்

  • 5ஜி நெட்வொர்க்

  • இந்த போனின் விலை ரூ.16,999

<div class="paragraphs"><p>Lava Blaze Duo 3 ஸ்மார்ட்போன்</p></div>
நியூஸி.யின் டேரில் மிட்செல், பிலிப்ஸ் சதம்: கடைசி ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in