Infinix Note Edge ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

Infinix Note Edge ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் போனை இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மிட்-ரேஞ்ச் விலையில் வெளியாகி உள்ள இந்த போனில் இடம்பெற்றுள்ள 3டி கர்வ்டு டிஸ்பிளே, 6,500 mAh பேட்டரி உள்ளிட்டவை கவனம் பெற்றுள்ளது. நீண்ட நேரம் இந்த போனை பயன்படுத்தும் போது பயனர்களுக்கு கண் சோர்வு ஏற்படாத என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக டியுவி ப்ளூ லைட் சான்றிதழ் பெற்றுள்ளது. லைவ் போட்டோஸ் அம்சம், ஏஐ அம்சங்கள், ஆக்டிவ் ஹாலோ லைட்டிங் நோட்டிபிகேஷன் அம்சமும் இதில் உள்ளது.

இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே

  • மீடியாடெக் டிரான்சிட்டி 7100 சிப்செட்

  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்

  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் உள்ள கேமரா

  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா

  • 6ஜிபி / 8ஜிபி ரேம்

  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்

  • 6,500 mAh பேட்டரி

  • 45 வாட்ஸ் சார்ஜிங் அம்சம்

  • 5ஜி நெட்வொர்க்

  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்

  • இந்த போனின் விலை ரூ.21,999 முதல் தொடங்குகிறது

Infinix Note Edge ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
‘சூப்பர்-8’ல் ஜிம்பாப்வே: முதல் சுற்றோடு வெளியேறியது ஆஸ்திரேலியா | T20 WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in