உல​கள​வில் முன்​னணி​யில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட பிரதமர் மோடி வேண்டுகோள்

உல​கள​வில் முன்​னணி​யில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட பிரதமர் மோடி வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், உலகள​வில் முன்​னணி​யில் இருப்​பதை நோக்கி செயல்பட வேண்​டும் என பிரதமர் மோடி கேட்​டுக் கொண்​டுள்​ளார்.

அனை​வருக்​கும் செயற்கை நுண்​ணறி​வு: உலகளா​விய தாக்​கம்' குறித்த உச்​சி ​மா​நாடு அடுத்த மாதம் நடை​பெறவுள்​ளது. இதை​ முன்​னிட்டு இந்​திய ஏஐ ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களின் தலை​வர்​களு​டன் நடை​பெற்ற கூட்​டத்​துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்​கி​னார்.

இந்த கூட்​டத்​தில் அவதார், பார்த்​ஜென், ஃப்​ராக்​டல், கான்​, ஜென்​லூப், இன்​டெலிஹெல்த், சர்​வம், டெக் மஹிந்​தி​ரா, ஜென்​டீக் உட்பட பல ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களின் சிஇஓ.க்​கள் பங்​கேற்​றனர்.

மத்​திய மின்​னனு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், இணை​யமைச்​சர் ஜிதின் பிர​சாதா ஆகியோ​ரும் இந்த கூட்​டத்​தில் பங்கேற்றனர்.

அப்​போது பிரதமர் மோடி கூறிய​தாவது: ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், செயற்கை நுண்​ணறிவு தொழில்​முனை​வோர் ஆகியோர் நாட்​டின் எதிர்​காலத்தை இணைந்து உரு​வாக்​குபவர்​கள். சமூகத்​தில் மாற்​றத்தை ஏற்​படுத்​து​வ​தில் செயற்கை நுண்​ணறிவு முக்​கிய​மான​தாக உள்​ளது. ஏஐ உச்சி மாநாட்டை இந்​தியா அடுத்த மாதம் நடத்​து​வதன் மூலம், தொழில்​நுட்ப துறை​யில் இந்​தியா முக்​கிய பங்​காற்​றுகிறது.

செயற்கை நுண்​ணறிவை மேம்​படுத்தி மாற்​றத்தை கொண்​டுவர இந்​தியா முயற்​சிகள் எடுக்​கிறது. புது​மை​களை கண்​டு​பிடித்து அவற்றை மிகப் பெரியள​வில் அமல்​படுத்​தும் திறன் நம் நாட்​டில் அதி​க​மாக உள்​ளது. உலகுக்கு தனிச்​சிறப்​பான ஏஐ மாடலை இந்​தியா அளிக்க வேண்​டும். உலகுக்​காக இந்​தி​யா​வில் தயாரிப்​பதை அது பிர​திபலிக்க வேண்​டும். இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​னார்.

உல​கள​வில் முன்​னணி​யில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட பிரதமர் மோடி வேண்டுகோள்
சென்செக்ஸ் 780 புள்ளி சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடி இழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in