தளம் புதிது: நேரம் என்ன நேரம்!

தளம் புதிது: நேரம் என்ன நேரம்!
Updated on
1 min read

வீன உலகில் இரவு பகல் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய பணித் தொடர்புகள் உலக அளவில் விரிந்திருப்பதால், நாம் பகலில் பணியாற்றும்போது, மறுமுனைவில் இரவா, பகலா என அறிந்துகொள்வது அவசியமாகிறது. இதற்கு உதவும் வகையில், உலக நேரங்களை உள்ளூர் நேரத்துக்கு மாற்றிக்காட்டுகிறது ‘மைடைம்சோன்’ இணையதளம். குரோம் பிரவுசருக்காக இது வழங்கும் நீட்டிப்பு சேவை மூலம் இந்த வசதியை மிக எளிதாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணத்துக்கு இமெயில் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒருவருடன் சந்திப்புக்கான திட்டமிடலில் ஈடுபடும்போது, இங்குள்ள நேரத்தைக் குறிப்பிட்டு சம்மதமா எனக் கேட்கும்போது, வலப் பக்கமாக கிளிக் செய்தால், மெயிலைப் பெறுபவர் ஊரில் என்ன நேரம் என மாற்றிக்காட்டுகிறது.

இணைய முகவரி: https://mytimezone.io/

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in