Published : 18 May 2023 02:23 PM
Last Updated : 18 May 2023 02:23 PM

பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ N53 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நார்சோ சீரிஸ் போன்களில் மிகவும் மெல்லிய (Slimmest) போன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது நார்சோ N53 ஸ்மார்ட்போனை ரியல்மி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.74 இன்ச் டிஸ்ப்ளே
  • யுனிசாக் டி612 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • மினி கேப்ஸ்யூல் அம்சம்
  • 4ஜி நெட்வொர்க்
  • 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரு வேறு ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இந்த போனின் விலை ரூ.8,999 மற்றும் ரூ.10,999 என அறிவிக்கப்பட்டுள்ளது

வீடியோ லிங்க்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x