போக்கோ F5, F5 புரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்

போக்கோ F5, F5 புரோ ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவில் நாளை (மே 9) போக்கோ நிறுவனம் F5 மற்றும் F5 புரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த போன்களின் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. போக்கோவின் அமீரக கிளை இதனை பகிர்ந்துள்ளது.

சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வருகிறது. பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது போக்கோ. அந்த வகையில் இப்போது போக்கோ F5 மற்றும் F5 புரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

போக்கோ F5 புரோ சிறப்பு அம்சங்கள்:

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே
  • ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரேஷன் 1 சிப்செட்
  • பின்பக்கத்தில் 3 கேமரா. அதில் OIS மற்றும் EIS சப்போர்ட் உடன் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,160mAh பேட்டரி
  • 67 வாட்ஸ் வயர் சார்ஜிங் வசதி
  • 30 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்

போக்கோ F5: இந்த மாடல் போனை பொறுத்தவரையில் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேஷன் 2 சிப்செட், 5,000mAh பேட்டரி, 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா. மற்றபடி போக்கோ F5 புரோவில் இடம்பெற்றுள்ள அதே அம்சங்களை இந்த போனும் கொண்டுள்ளது. அதே போல ரேம் மற்றும் ஸ்டோரேஜ் குறித்த விவரங்கள் மாறுபடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in