ட்விட்டரில் சோதனை முறையில் 280 எழுத்துகள் வரம்பு அறிமுகம்

ட்விட்டரில் சோதனை முறையில் 280 எழுத்துகள் வரம்பு அறிமுகம்
Updated on
1 min read

ட்விட்டரில் பதிவிடுவதற்கு முன்பு இருந்த 140 எழுத்துகள் வரம்பை இரட்டிப்பாக்கி சோதனை முறையில் 280 எழுத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் தலைமை நிர்வாகி ஜேக் டார்சி, ''இது சிறிய மாற்றம்தான், ஆனால் எங்களுக்கு பெரிய நடவடிக்கை.

ட்வீட் செய்யும்போது மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு எங்கள் குழு தீர்வு கண்டுள்ளது.

எங்களின் ஆய்வில் எழுத்துகளின் வரம்பு ஆங்கிலத்தில் பதிவிடும் ட்வீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது தெரிய வந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது காலாண்டில் 116 மில்லியன் டாலர்கள் இழப்பைச் சந்தித்துள்ள ட்விட்டர் நிறுவனம் முந்தைய ஆண்டில் 107 மில்லியன் டாலர்களைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய ட்வீட் வரம்பு, ட்விட்டரை லாபப் பாதையை நோக்கிக் கொண்டு செல்லுமா என்ற கேள்வி இணையவாசிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையடுத்து ட்விட்டரில், புதிய ட்விட்டர் எழுத்து வரம்பான #280characters என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in