

சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டில் மடக்கும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. கேலக்சி நோட் வரிசையில் இது வெளியாகும். ஓஎல்இடி தொழில்நுட்பத்தில் இதன் தொடுதிரை இருக்கும்.
ரோபோ நடனம்
சீனாவில் 1069 ரோபோக்களை நடனம் ஆட வைத்து கின்னஸ் சாதனை செய்துள்ளனர். டபிள்யூ எல் என்கிற நிறுவனம் தயாரிக்கும் இந்த ரோபோ குரல் வழி கட்டளைக்கு ஏற்ப இயங்கும்.
ஒளிரும் கீ போர்ட்
எக்ஸ்-பவுஸ் என்கிற நிறுவனம் விரல்களில் ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற வகையில், புதிய கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த கீ போர்ட் எல்இடி விளக்கில் ஒளிரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் கார்
சீனாவைச் சேர்ந்த டென்செண்ட் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பதற்காக ஜெர்மனைச் சேர்ந்த லில்லியன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் 600 கோடி முதலீடு செய்துள்ளது. முதற்கட்டமாக 2 பேர் பயணிக்கும் பறக்கும் காரை சோதித்துள்ள இந்த நிறுவனம் அடுத்த கட்டமாக 5 பேர் பயணிக்கும் பறக்கும் காரை உருவாக்கி வருகிறது. தரையிலிருந்து நேரடியாக உயரே எழும்பும் இந்த கார், 300 கிலோமீட்டார் வேகத்தில் பறக்கும். மின்சார பேட்டரி மூலம் இயங்குவதால் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு இருக்காது. டிவிட்டர், ஸ்கைப் நிறுவனங்களின் இணை நிறுவனர்களிடமிருந்து லில்லியன் நிதி திரட்டி உள்ளது.
நீளமான நகரும் பாதை
உலகின் மிக நீளமான நகரும் நடைபாதை ஹாங்காங்கின் மத்திய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் நகரத்தின் குயின் ரோடு, கண்டிட் ரோடி, மிட் லெவல் என பல முக்கிய வர்த்தக மையங்களை இந்த நகரும் பாதை இணைக்கும். 800 மீட்டர் நீளத்துக்கு இது அமைக்கபட்டுள்ளது. இந்த நகரும் நடைபாதை சில இடங்களில் மேலே ஏறும் படிக்கட்டுகளாகவும் இருக்கும். 78,000 பாதாசாரிகள் இதை தினசரி பயன்படுத்துகின்றனர். 1993-ல் திறக்கப்பட்ட இந்த நடைபாதை இப்போது முழுவதும் நகரும் பாதையாக உருவாகியுள்ளது.