மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன்
தொழில்நுட்பம்
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். வரும் ஏப்ரல் 5-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் மோட்டோ ஜி சீரிஸ் வரிசையில் ஜி13 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் திரை அளவு
- ஹெச்டி+ ரெஸலுஷன்
- எல்சிடி டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 5,000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.9,499 மற்றும் ரூ.9,999
