இந்தியச் சந்தையில் விவோ வி27 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

விவோ வி27 புரோ ஸ்மார்ட்போன்
விவோ வி27 புரோ ஸ்மார்ட்போன்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி27 சீரிஸ் வரிசையில் இடம்பெற்றுள்ள விவோ வி27 மற்றும் வி27 புரோ என இரண்டு போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் வி27 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சிறப்பு அம்சங்கள்

  • இரண்டு போன்களும் 6.78 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளன
  • மீடியாடெக் டிமன்சிட்டி 7200 5ஜி ப்ராசஸரை கொண்டுள்ளது வி27
  • மீடியாடெக் டிமன்சிட்டி 8200 5ஜி ப்ராசஸரை கொண்டுள்ளது வி27 புரோ
  • பின்பக்கத்தில் மூன்று கேமராவை இந்த போன்கள் கொண்டுள்ளன. அதில் பிரதான 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • முன்பக்க கேமராவும் 50 மெகாபிக்சலை கொண்டடுள்ளது
  • 4,600 mAh பேட்டரி
  • 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • டைப் சி சார்ஜிங் போர்ட்
  • 5ஜி சப்போர்ட்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் வி27 போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.32,999 மற்றும் ரூ.36,999 என உள்ளது. வரும் 23-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்
  • 8ஜிபி + 128ஜிபி, 8ஜிபி + 256ஜிபி மற்றும் 12ஜிபி + 256ஜிபி என மூன்று வேரியண்ட்டுகளில் வி27 புரோ வெளிவந்துள்ளது
  • இதன் விலை முறையே ரூ.37,999 ரூ.39,999 மற்றும் ரூ.42,999 என உள்ளது. வரும் 6-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்
  • இந்த போன்களுடன் புதிய TWS ஏர் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in