

கூகுள் தேடுபொறி இயந்திரம் இன்று (செப்டம்பர் 27) தனது 19-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதற்காக, 19 வகையான விளையாட்டுகளுடன் டூடுல் போட்டு அந்நிறுவனம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பங்களால் கட்டி போடப்பட்ட இந்த நூற்றாண்டில் புதிய தகவல்களை அறிய கூகுள்தான் பெரும்பாலனவர்களுக்கு ஆசானாக உள்ளது. கடந்த 1988-ம் ஆண்டு துவங்கப்பட்ட குகூஸ் தற்போது தனது 19வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.
அதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் தனது பயனாளர்களுக்கு குகூள் 19 வகையான டூடுல் விளையாட்டுகளை உருவாக்கியுள்ளது.
இந்த விளையாட்டுகளை கூகுள் முகப்புப் பக்கத்தில் உள்ள டூடுலை கிளிக் செய்து அதில் வரும் ஸ்பின்போர்டை சுழற்றி பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாடலாம்.
இதில் பாம்பு விளையாட்டு, டிக்-டேக்-டோ, எர்த் டே க்விஸ், பேக் மேன், ஹலோ மேன் உள்ளிட்ட பல விளையாட்டுகள் உள்ளன.