பொருள் புதுசு: சாம்சங் கியர் 360

பொருள் புதுசு: சாம்சங் கியர் 360

Published on

சுற்றுலா செல்லும் போது எடுத்து செல்லும் வகையில் கையடக்க கேமராவை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கேமரா 360 டிகிரியில் சுழன்று படம் எடுக்கும். படம் எடுத்து உடனடியாக நமது ஸ்மார்ட்போனுக்கு பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும். இந்த கேமராவின் விலை 290 டாலர்.

சிலந்தி ரோபோ

silandhijpg100 

சிலந்தி வடிவலான புதிய ரோபோவை உருவாக்கியுள்ளனர். இதன் முன்புறமும் பின்புறமும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி நினைவக திறன் கொண்டது. காடுகளில் பல வகையான சிறிய உயிரினங்களை ஆய்வு செய்வதற்கு இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது.

ஐபோன் கவர்

iphonejpg100 

வயர்லஸ் ஹெட்போனை கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது நினைவிருக்கும். அதை ஐபோனுடனே வைத்துக் கொள்ளும் வகையில் புதிய ஐபோன் கவரை வடிவமைத்துள்ளனர். மேலும் இந்த கவரில் கூடுதலாக பேட்டரி வேறு பொருத்தப்பட்டுள்ளதால் சார்ஜ் குறையாது.

விநியோக ரோபோட்

robotjpg100 

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜூரிச் நகரத்தில் சிறிய வடிவிலான ரோபோக்களை பொருட்களை விநியோகம் செய்வதற்கு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு சோதனை முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஜெல்மோலி என்ற வணிக நிறுவனம் இந்த ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ 10 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளுக்கு பொருட்களை விநியோகம் செய்கிறது. ஒரு மணி நேரத்துக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரோபோ செல்கிறது.

புதிய விண்வெளி உடை

dressjpg100 

விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஸ்டார் வார்ஸ் படத்தில் வரும் மாடலை போல் இந்த உடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாசா விண்வெளி வீரர்களுக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் இதை பயன்படுத்த உள்ளனர். இரண்டு மடங்கு வெற்றிட அழுத்தத்தில் இந்த விண்வெளி உடை சோதித்து பார்க்கப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in