Mr.Tweet | ட்விட்டரில் தனது பெயரை மாற்றிய எலான் மஸ்க்

மஸ்க் ட்விட்டர் பக்கம்
மஸ்க் ட்விட்டர் பக்கம்
Updated on
1 min read

கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்தில் தனது பெயரை மிஸ்டர் ட்வீட் என மாற்றியுள்ளார் எலான் மஸ்க். இவர் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளத்தில் தனது பெயரை அவ்வப்போது மாற்றும் வழக்கத்தை கொண்டவர் மஸ்க். அந்த வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை அவரே ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார். இனி தானே நினைத்தாலும் அந்தப் பெயரை மாற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

புதுப் பெயர் வந்தது எப்படி? இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் வடிவேலுவுக்கு அவ்வப்போது சில சிறப்பு பெயர்கள் கொடுக்கப்படும். அது போலவே இந்த பெயர் அவருக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை அவரது வழக்கறிஞர் தவறுதலாக சொல்லியுள்ளார். அது மஸ்கிற்கு ரொம்பவே பிடித்து போயுள்ளது. ஒரு காரசாரமான விவாதம் நடந்த போது ‘மிஸ்டர் ட்வீட்’ என சொல்லியுள்ளார்.

இது ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய காரணத்தால் கொண்டு வரப்பட்ட மாற்றம் அல்ல. ட்விட்டர் தளத்தில் தனது நேரத்தை அதிகம் செலவிட்டு வருபவர் மஸ்க். அதை கருத்தில் கொண்டே இந்த பெயர் அவருக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in