Published : 25 Jan 2023 04:51 PM
Last Updated : 25 Jan 2023 04:51 PM

இந்தியாவில் ஒரு மணி நேரம் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்

கோப்புப்படம்

சென்னை: இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் பயனர்கள் அதன் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் முடங்கியதாக தகவல். அவுட்லுக் சேவை முடக்கத்தால் பயனர்கள் தங்களால் மின்னஞ்சல் அனுப்பவும், பெறவும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு குறித்து இந்திய பயனர்கள் அதிகம் புகார் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து முடங்கிய தளங்கள் குறித்த தகவலை வெளியிடும் டவுன்டிட்டக்டர் தளத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் தாங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கலை தெரிவித்துள்ளனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் குறைவாக இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் மைக்ரோசாப்ட் சேவைகளான டீம்ஸ், அவுட்லுக், Azure மற்றும் மைக்ரோசாப்ட் ஸ்டோரை பயன்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

வலைதளம், செயலி மற்றும் லாக்-இன் செய்வதில் சிக்கல் இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பயனர்கள் #MicrosoftTeams மற்றும் #Outlook என ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட் செய்திருந்ததை பார்க்க முடிந்தது.

நெட்வொர்க் சிக்கல் இருந்ததாகவும். அதில் இப்போது தீர்வு கண்டுள்ளதாவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு தாக்கம் ஏதும் இல்லாமல் இருக்கும் வகையில் கவனம் செலுத்தி வருவதாகவும் மைக்ரோசாப்ட் ட்வீட் செய்துள்ளது. தற்போது மைக்ரோசாப்ட் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x