டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா... - கடந்த ஆண்டு அலெக்சாவிடம் இந்தியர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் என்னென்ன?

அலெக்சா | கோப்புப்படம்
அலெக்சா | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கடந்த ஆண்டு இந்திய பயனர்கள் அமேசானின் அலெக்சாவிடம் கேட்ட கேள்விகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு. பொது அறிவு, பிரபலங்கள், என்டர்டெயின்மென்ட், சமையல், விளையாட்டு, தனித்துவமிக்க கேள்விகள் என்ற பிரிவுகளில் இந்த கேள்விகளை அமேசான் வெளியிட்டுள்ளது.

அமேசானின் அலெக்சா குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இதுவொரு வெர்ச்சுவல் அசிஸ்டன்ட் ஸ்மார்ட் ஸ்பீக்கர். இணைய இணைப்பு வசதியுடன் இயங்கி வருகிறது அலெக்சா. தமிழ் உட்பட பல்வேறு உலக மொழிகளில் அலெக்சா பேசி வருகிறது. விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வது ஆகட்டும். விரும்பிய பாடலை பிளே செய்யவும். சமயங்களில் கதை சொல்லியாகவும் அலெக்சா உலக மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அலெக்சாவிடம் இந்தியர்கள் கேட்ட கேள்விகளில் சில..

  • புர்ஜ் கலீபாவின் உயரம் என்ன?
  • பூமியில் உயர்ந்த மனிதர் யார்?
  • உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் யார்?
  • ஏலியன்கள் இருப்பது உண்மையா?
  • ட்விட்டரின் நிறுவனர் யார்?
  • பிட்காயின் விலை என்ன?
  • தங்கத்தின் இன்றைய விலை என்ன?
  • ராஷ்மிகா மந்தனா குறித்து சொல்லு?
  • கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்?
  • உடுப்பி சாம்பார் வைப்பது எப்படி?
  • தோசை ஊற்றுவது எப்படி?
  • ஸ்கோர் என்ன?
  • கால்பந்தில் ஆப்சைட் என்றால் என்ன?
  • யார் இந்த எம்பாப்பே?
  • ரொனால்டோ - மெஸ்ஸி: சிறந்த வீரர் யார்?
  • டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?
  • எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணும்?
  • எனக்காக நீ ஹோம்வொர்க் செய்ய முடியுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in