கூகுள் கிளவுட் புரோகிராமில் குறைபாடு: சுட்டிக்காட்டிய இந்திய ஹேக்கர்களுக்கு ரூ.18 லட்சம் சன்மானம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: அமெரிக்க டெக் நிறுவனமான கூகுள் அண்மையில் அந்த தளத்தில் இருந்த குறைபாட்டை (Bug) சுட்டிக்காட்டிய இந்தியாவை சேர்ந்த இரண்டு ஹேக்கர்களுக்கு ரூ.18 லட்சம் சன்மானம் வழங்கியுள்ளது.

சங்க காலத்தில் புலவர்கள் தங்கள் திறனை கொண்டு பாடல் எழுதி, அதனை கொடையுள்ளம் படைத்த மன்னர்களிடம் காட்டி பரிசில் பெற்று செல்வார்கள் என பாடப்புத்தகங்களில் படித்துள்ளோம். இதுவோ டிஜிட்டல் காலம். அனைத்தும் இணைய மயமாகிவிட்ட சூழலில் பெரும்பாலான மக்கள் அதிகம் உலாவும் வலைதளங்களில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை தங்களது தொழில்நுட்ப மூளையின் திறன் மூலம் கண்டுபிடித்து, அதனை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் கிடைக்கிறது.

இந்த முறை கூகுள் கிளவுட் புரோகிராமில் இருந்த குறைபாட்டை சுட்டிக்காட்டிய இந்தியாவை சேர்ந்த இரண்டு ஹேக்கர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீராம் கே.எல் மற்றும் சிவனேஷ் அசோக் ஆகியோர் பெற்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் கூகுள் மென்பொருளில் குறிப்பாக கூகுள் கிளவுட் புரோகிராமில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்பதை கண்டறிய முயற்சி செய்துள்ளனர். அப்போது அதில் எஸ்எஸ்ஹெச்-இன்-பிரவுசரில் சிக்கல் இருப்பதை அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து அதனை கூகுளிடம் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த சிக்கலை கூகுள் பிக்ஸ் செய்துள்ளது. இதனை அவர்கள் இருவரும் தங்களது வலைப்பதிவில் பதிவு செய்துள்ளனர். இதுதான் கூகுளில் அவர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி என்றும் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in