

சென்னை: இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள உதவுகிறது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. இந்தத் தளம் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக டெஸ்க்டாப் அப்டேட்டை பெற்றுள்ளது. புதுப்பொலிவு பெற்றுள்ள இந்தத் தளத்தின் புதிய அப்டேட்கள் குறித்து பார்ப்போம்.
சுமார் 58 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், 300 மொழிகளில் தகவல்கள் மற்றும் மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது. இந்த நிலையில் எளிதான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சில அம்சங்களை இப்போது இந்தத் தளம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
நம்மில் பலருக்கும் விக்கிப்பீடியா கட்டுரைகள் பல்வேறு தருணங்களில் உதவி இருக்கலாம். கல்லூரியில் அசைன்மென்ட் செய்வதில் துவங்கி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வது வரை அது நீள்கிறது.
புதிய அம்சங்கள் என்னென்ன?