Published : 26 Dec 2022 04:42 PM
Last Updated : 26 Dec 2022 04:42 PM

ப்ரீமியம்
Rewind 2022: ஸ்டார்ட்-அப், யுனிகார்ன் எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 3-வது இடம்

கோப்புப் படம்

புதுடெல்லி: ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை (77,000) மற்றும் யுனிகார்ன்களின் எண்ணிக்கையில் (107) இந்தியா உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது. 2022-ஆம் ஆண்டில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் இந்த ஆண்டுக்கான செயல்பாடுகளின் முக்கிய அம்சங்கள்:

  • எஸ்சிஐ (அறிவியல் ஆராய்ச்சி இதழ்கள்) இதழ்களில் வெளியீடுகளின் எண்ணிக்கையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது. 2013 இல் 6-வது இடத்தில் இருந்து இப்போது உலகளவில் 3-வது இடத்தில் உள்ளது
  • அறிவியல் மற்றும் பொறியியலில் வழங்கப்பட்ட பிஎச்டி பட்டங்களின் எண்ணிக்கையில் (கிட்டத்தட்ட 25,000) அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2022-ல் ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை (77,000) மற்றும் யுனிகார்ன்களின் எண்ணிக்கையில் (107) இந்தியா உலகளவில் 3வது இடத்தில் உள்ளது.
  • உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டின் தரவரிசையில் இந்தியா 2015 ஆம் ஆண்டில் 81 வது இடத்தில் இருந்து 2022 இல் 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் இந்தியா 2-வது இடத்திலும் மத்திய மற்றும் தெற்கு ஆசிய பொருளாதாரங்களில் குறியீட்டில் முதலாவது இடத்திலும் உள்ளது.
  • உலகில் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளுக்கு மிகவும் வசீகரமான முதலீட்டை பெறுவதிலும் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • கடந்த 10 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மொத்தச் செலவு மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
  • கடந்த 9 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பும் இரட்டிப்பாகியுள்ளது.
  • குடியுரிமை காப்புரிமை தாக்கல் செய்வதில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதலீடு கடந்த 8 ஆண்டுகளில் 2014-15 இல் சுமார் ரூ 2900 கோடியிலிருந்து 2022-23-ல் ரூ 6002 கோடியாக இருமடங்காக அதிகரித்துள்ளது.
  • ஸ்வமிதா (கிராமங்களின் கணக்கெடுப்பு மற்றும் கிராமப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்) திட்டத்தின் கீழ், 2,00,000+ கிராமப்புற பகுதிகளில் சர்வே அப் இந்தியா வெற்றிகரமாக ட்ரோன் கணக்கெடுப்பை நடத்தி, சொத்து அட்டைகளை விநியோகித்துள்ளது.
  • பள்ளிகளுக்கு புதுமையை எடுத்துச் செல்லுதல்: 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ’மனாக்’ திட்டம் நாடு முழுவதும் உள்ள நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து ஒரு மில்லியன் யோசனைகளைக் கொண்டு வர இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • பெண் விஞ்ஞானிகளை மேம்படுத்துதல்: அறிவியல் துறையில் பாலின ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்ய, கிரண் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x