மிஸ்டு கால் மூலம் பண மோசடி - சிம் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

மிஸ்டு கால் மூலம் பண மோசடி - சிம் கார்டு மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?
Updated on
1 min read

புதுடெல்லி: மிஸ்டு கால் மூலம் பண மோசடி என்ற புதுவிதமான டெக்னிக்கை மோசடியாளர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அண்மையில் இந்த வழிமுறையைப் பின்பற்றி டெல்லிவாசி ஒருவரிடம் ரூ.50 லட்சத்தை ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர். ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்த பிறகுமொபைல் தொலைந்து போனது அல்லது பழைய சிம் சேதமடைந்ததாக கூறி டூப்ளிகேட்சிம்மை மோசடியாளர்கள் பெற்று விடுகின்றனர். இதையடுத்து, பணப் பரிமாற்றத்துக்கு இறுதி பாதுகாப்பாக கருதப்படும் ஓடிபி மோசடியாளர்களின் புதிய சிம்முக்கு சென்று விடுகிறது. இதையடுத்து, அந்த மோசடிக் கும்பல் வங்கி கணக்கிலிருந்த அந்த வாடிக்கையாளரின் பணத்தை எளிதாக தங்களது கணக்குக்கு மாற்றிக் கொண்டு விடுகிறது. இதனை "சிம் ஸ்வாப்" மோசடி என்கின்றனர் போலீஸார். இதே வழியில்தான் டெல்லிவாசியின் மொபைல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்து பணத்தை சுருட்டி ஏமாற்றியுள்ளனர்.

தெரியாத எண்கள், நபர்களிடமிருந்து நமதுகணக்குக்கு வரும் மின்னஞ்சல்களை திறப்பதை, பதிவிறக்கம் செய்வதை அல்லது இணைப்பை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறும் நபர்களிடம், நம்முடைய கணக்கு விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் உள்ளிட்ட எந்தவிதமான சுய விவரங்களையும் பகிர்ந்து கொள்ள கூடாது. ஏனெனில், வங்கி அல்லது எந்தவொரு செல்பேசி சேவை நிறுவனங்களும் அதுபோன்ற விவரங்களை ஒருபோதும் வாடிக்கையாளரிடம் கேட்பதில்லை.

அப்படி மீறி அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்புகள் குறித்து உரிய வங்கி அல்லது நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவித்து உஷாராக வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in