இந்திய சந்தையில் சாம்சங் M04 ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, அம்சங்கள்

சாம்சங் M04 ஸ்மார்ட்போன்
சாம்சங் M04 ஸ்மார்ட்போன்
Updated on
1 min read

சென்னை: இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் M04 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு விதமான ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது அந்நிறுவனத்தின் அண்மைய வரவாக அமைந்துள்ளது M04 ஸ்மார்ட்போன்.

இது M சீரிஸ் வரிசையில் வெளிவந்துள்ள போனாகும். மலிவான விலையில் இந்த சீரிஸ் போன்களை சாம்சங் விற்பனை செய்து வருகிறது. வரும் டிசம்பர் 16 முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.5 இன்ச் ஹெச்.டி ஐபிஎஸ் எல்சிடி ஸ்கிரீன்
  • மீடியாடெக் ஹீலியோ P35 புராசஸர்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 13 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4ஜிபி ரேம். 64ஜிபி மற்றும் 128ஜிபி என இருவேறு ஸ்டோரேஜ் திறனை கொண்டுள்ளது இந்த போன்
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
  • 5,000mAh திறன் கொண்ட பேட்டரி
  • 15 வாட்ஸ் வயர் சார்ஜிங் வசதி
  • டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.8,499-க்கும், 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போன் ரூ.9,499-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.
  • நான்கு ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்
  • இரண்டு முறை இயங்குதள அப்டேட் செய்து கொள்ளலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in