மலிவு விலையிலான இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை & அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன்
இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன்
Updated on
1 min read

மலிவான விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். இதன் ஹாட் சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மிகவும் பிரபலம். காரணம் பட்ஜெட் விலையில் இந்த பொங்கலை விற்பனை செய்யப்படுவதுதான். இந்த சூழலில் இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

நீலம், பச்சை, கருப்பு என மூன்று வண்ணங்களில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. வரும் 9-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனை செய்யப்பட உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.6 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே
  • டிமன்சிட்டி 810 பிராசஸர்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது ஃபிராண்ட் கேமரா
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
  • 5000mAh பேட்டரி
  • டைப் சி சார்ஜிங் போர்ட்
  • 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
  • 5ஜி இணைப்பில் இயங்கும் இந்த போனின் விலை ரூ.11,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in