

போலராய்டு கேமரா நினைவில் இருக்கிறதா? ஸ்மார்ட் போன் யுகத்தில் அவை செல்வாக்கு இழந்து விட்டாலும் இந்த பிராண்ட், ஸ்மார்ட்போன் செயலிகள் வடிவில் தாக்குப் பிடித்து நிற்கிறது. இவற்றில் இன்ஸ்டாகிராம் செயலிக்குப் போட்டியாகக் கருதப்படும் ‘போலாராய்டு ஸ்விங்’ எனும் செயலி இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
முதல் கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாகியிருக்கும் இந்தச் செயலி மூலம் வாழ்க்கைத் தருணங்களை ஒரு நொடி கணங்களாகப் படம் பிடிக்கலாம். படங்களைத் தொடும் போது அல்லது போனை சாய்க்கும் போது உயிர்பெறும் வகையில் இந்தப் படங்கள் அமைந்துள்ளன. பிரேம்களை வளைப்பது, செய்தி மற்றும் இமோஜிக்கள் மூலம் பதில் அளிப்பது உள்ளிட்ட புதிய அம்சங்களும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு: >http://www.polaroid.com/products/swing-app