

திசை காட்டும் கல்
நாம் செல்லவேண்டிய இடத்தை வைஃபை மூலமாக இந்தக் கருவிக்குத் தெரிவித்துவிட வேண்டும். பின்பு நாம் பாதை மாறி போனாலும் சரியான திசையை இந்த கல் காட்டுகிறது. ஒளி மூலமாக செல்லவேண்டிய திசையைக் காட்டுகிறது.
ஸ்மார்ட் போர்வை
இந்தப் போர்வை குளிர்காலங்களில் உடம்புக்கு தேவையான வெப்பத்தை வழங்குகிறது. இந்தப் போர்வையின் மூலம் மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதைக் கொண்டு செல்வதற்கு எளிதாகவும் எடை குறைவாகவும் உள்ளது.
வெளிச்சம் தரும் ஸ்பீக்கர்
புதிய தொழில்நுட்பங்களுடன் புளுடூத் ஸ்பீக்கர்கள் சந்தையில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இந்த ஸ்பீக்கரை விளக்காகவும் பயன்படுத்த முடியும். நீங்கள் சவுண்டை அதிகரிக்க அதிகரிக்க ஸ்பீக்கரின் மேல் பகுதியில் உள்ள விளக்கின் வெளிச்சம் அதிகமாகும்.