

சென்னை: வரும் டிசம்பர் 8-ம் தேதி இந்திய சந்தையில் ரியல்மி 10 புரோ சீரிஸ் 5ஜி ரக ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை ரியல்மி நிறுவனம் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு உறுதி செய்துள்ளது. இந்த போன் வளைவான (Curved) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என தெரிகிறது. அன்றைய தினம் ரியல்மி 10 புரோ மற்றும் ரியல்மி 10 புரோ பிளஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது 10 புரோ சீரிஸ் 5ஜி வரிசை போன்களை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்ய உள்ளது ரியல்மி.
ரியல்மி 10 புரோ 5ஜி அம்சங்கள்
ரியல்மி 10 புரோ பிளஸ் 5ஜி போனை பொறுத்த வரையில் 10 புரோ மாடலுடன் ஒப்பிடும்போது 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 சிப்செட் மட்டுமே மாறுபட்டுள்ளது. மற்றபடி கேமரா இயங்குதளம் என அனைத்தும் ஒன்று தான். இந்த போன்களின் விலை ரூ.18,200 முதல் ரூ.27,300 வரையில் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.