தகவல் வழங்கும் ஷூ

தகவல் வழங்கும் ஷூ
Updated on
1 min read

பொதுவாக ஷூ அழகுக்காகவும் வசதிக்காகவும் வாங்குவோம். இதனால் நம் கால் வலி ஏற்படாமல் இருப்பதுடன் நடப்பதற்கும் ஓடுவதற்கும் மிக பயனுள்ளதாக இருக்கிறது. இந்த புதிய ஷூ நமக்கு பல்வேறு தகவல்களை வழங்குகிறது. இந்த ஷூவின் அடியில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. எவ்வளவு தூரம் நடந்தால் சோர்வு ஏற்படும் என்பது உள்ளிட்ட தகவல்களை வழங்குகிறது. இதை மேப்மைரன் என்ற செயலி மூலமாக நமது மொபைலுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

பர்போ

நேரமின்மையால் நாய் வளர்க்க சிரமப்படுவதுண்டு. இந்த சிரமத்தை தவிர்ப்பதற்கு தற்போது கருவி உருவாக்கப்பட்டுள்ளது. பர்போ கருவி உங்கள் நாயை மிக கவனமுடன் பார்த்துக் கொள்ளும். இந்தக் கருவியில் 360 டிகிரி சுழலக்கூடிய கேமரா உள்ளது. இந்தக் கருவியின் அப்ளிகேஷனை மொபைலுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். நாய் அதிகமாக குரைக்கும் போது தகவலை மொபைலுக்கு அனுப்பும். 30 நாய்களை பற்றிய தகவல்களை இந்தக் கருவி வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in