

‘இன்ஸ்ட்டாகிராம்’ என்ற பிரபல ஒளிப்படங்களைப் பதிவேற்றவும், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்ளவும் பயன்படும் சமூக வலைத்தளம், தற்போது குறுஞ்செய்தி அனுப்பக்கூடிய செயலியை (messaging app) அறிமுகப்படுத்தியுள்ளது. ‘போல்ட்’ (Bolt) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில், ஸ்மார்ட்போன்களில் ஒளிப்படங்களையும், ஒளிப்பதிவுகளையும் அனுப்ப முடியும்.
இந்த செயலியை தற்போது நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் பயன்படுத்த இயலும்.
மேலும், நீங்கள் அனுப்பும் ஒளிப்படங்கள், ஒளிப்பதிவுகள் ஆகியவற்றுடன் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தாய் நிறுவனமும், பிரபல சமூக வலைத்தளமுமான ஃபேஸ்புக் சமீபத்தில் ‘Slingshot’ என்ற குறுஞ்செய்தி அனுப்பும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.