

டிவியை நிறுத்த வேண்டும் என்றால் ரிமோட்டை தேட வேண்டி வரும். பேனை நிறுத்துவதற்கு ஒவ்வொரு முறையும் எழுந்து சென்று நிறுத்த வேண்டியிருக்கும். ஆனால் இவற்றை தற்போது ஒரு ரிமோட்டின் மூலமாக செய்ய முடியும். டிவியை நிறுத்துவது, பேன், லைட் ஸ்பீக்கர்ஸ், கேமரா என அனைத்தையும் ஒரே ரிமோட்டில் இயக்கும் வசதியுடன் வந்துள்ளது ஸ்மார்ட் ரிமோட். இந்த ரிமோட்டை புளூடுத் மற்றும் வைஃபை மூலமாக இணைத்துக் கொள்ள வேண்டும்.
பை வடிவில் கம்ப்யூட்டர்
முதுகில் மாட்டிச் செல்லக்கூடிய வகையில் பை போன்ற புதிய பர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது ஜோட்டக் நிறுவனம். இதை மினி கம்ப்யூட்டர் என்றும் கூறுகின்றனர். அதாவது கம்ப்யூட்டருக்குத் தேவையான சிபியூ பை வடிவில் உள்ளது. அதனால் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். மேலும் இதனுடன் கிராபிக்ஸ் கார்டுகள் வழங்கப்படும். இந்த சிபியூ-வில் மூன்று யுஎஸ்பி இணைப்புகள் உள்ளன. இதிலிருந்து பேட்டரியை எடுத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிகச் சிறிய பைக்
மிகச் சிறிய வடிவிலான இந்த பைக்கை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யமுடியும். மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். மூன்று வெவ்வேறான வண்ணங்களில் இந்த பைக் கிடைக்கிறது.
இரு அளவுகளில் ஒரு டேபிள்
முழுவதும் மரத்தினால் செய்யப்பட்ட இந்த புதிய வகை டேபிளை இரண்டு அளவுகளில் பயன்படுத்த முடியும். அதாவது உயரத்திற்கு தகுந்தாற்போல் இந்த டேபிளை நாம் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் இதை பல்வேறு டிசைன்களிலும் பயன்படுத்த முடியும்.
நவீன ரோபோ
மனிதனை விட வேகமாக செயல்படக்கூடியது என்று மீண்டும் ஒருமுறை நவீன ரோபோ நிரூபித்துள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற கண்காட்சியில் ரூபிக்ஸ் கியூபிக்கை 0.637 விநாடிகளில் சரியாக பொருத்தியிருக்கிறது இந்த நவீன ரோபோ.