விரைவில் யூடியூபில் அறிமுகமாக உள்ள 'ஹேண்டில்ஸ்': முழு விவரம்

படம்: யூடியூப் ஹேண்டில்ஸ்
படம்: யூடியூப் ஹேண்டில்ஸ்
Updated on
1 min read

கலிபோர்னியா: வெகு விரைவில் யூடியூப் தளத்தில் ஹேண்டில்ஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூடியூப் தளத்தில் உள்ள கிரியேட்டர்ஸ் உட்பட பலரையும் சுலபமாக அடையாளம் கண்டு, தொடர்பு கொள்ள இந்த ஹேண்டில்ஸ் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான கிரியேட்டர்களுக்கு வீடியோவை அப்லோட் செய்யவும், கமெண்ட் செய்யவும் மட்டுமே யூடியூப் தளம் பயன்படுவதில்லை. அதையும் கடந்து பல பயன்களை இந்த தளம் வழங்கி வருகிறது. அதன் காரணமாக ஹேண்டில்ஸ் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் தரப்பில் அதன் பிளாக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சேனலுக்கும் பிரத்யேக ஹேண்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுலபமாக பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான கன்டென்ட் சார்ந்த மற்றும் கிரியேட்டர்களை அடையாளம் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது யூடியூப் பக்கம் மற்றும் ஷார்ட்ஸில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இதன் மூலம் சுலபமாக ஒருவரை குறிப்பிட்டு கமெண்ட் செய்யவும், கம்யூனிட்டி போஸ்ட் போடவும், வீடியோ டெஸ்கிரிப்ஷன் மூலம் மேற்கோள் காட்டவும் முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்த சேவை அறிமுகமாக உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்கள் சேனல்களுக்கு ஹேண்டில்களை தேர்வு செய்யவில்லை எனில் யூடியூப் தரப்பில் ஒரு ஹேண்டில் வழங்கப்படும் என தெரிகிறது. இதனை யூடியூப் ஸ்டூடியோவில் பயனர்கள் பின்னர் மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த ஹேண்டில் அக்சஸை ஒருவர் பெற பல்வேறு காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. சப்ஸ்கிரைபர் எண்ணிக்கை, யூடியூப் சேனல் ஆக்டிவ் ஸ்டேட்டஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும் என தெரிகிறது. ட்விட்டர் தளத்தில் ஒருவரை மென்ஷன் செய்ய அவரது ஹேண்டில்களை பயன்படுத்துவது வழக்கம். அதே போலவே இது பயன்படும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in