Published : 03 Oct 2022 03:41 PM
Last Updated : 03 Oct 2022 03:41 PM

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை & அம்சங்கள்

மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன்.

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுக்கு அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைய காலமாக வரிசையாக பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் புது போன்களை மோட்டோ விற்பனைக்கு களம் இறக்கி வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனத்தின் ஜி சீரிஸ் வரிசையில் ஜி72 ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • 6.5 இன்ச் திரை அளவு.
  • முழு திறன் கொண்ட ஹெச்.டி டிஸ்பிளே.
  • மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்.
  • 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் பிரதான கேமரா 108 மெகாபிக்சலை கொண்டுள்ளது.
  • முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கொண்ட கேமரா இடம் பெற்றுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
  • 5000mAh திறன் கொண்ட பேட்டரி.
  • 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்.
  • 3 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்.
  • டைப் சி சார்ஜிங் போர்ட்.

இரண்டு வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.18,999. இருந்தாலும் விலையில் அறிமுகம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

— Motorola India (@motorolaindia) October 3, 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x