இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ பாப் 6 புரோ ஸ்மார்ட்போன் | விலை & அம்சங்கள்

இந்தியாவில் அறிமுகமானது டெக்னோ பாப் 6 புரோ ஸ்மார்ட்போன் | விலை & அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பாப் 6 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். தற்போது இந்தியாவின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களான அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை கால சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போனும் அந்த சலுகையில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006 வாக்கில் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்திய சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்த சூழலில் தான் என்ட்ரி லெவல் பிரிவில் பாப் 6 புரோ ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனின் விலை ரூ.7,999. இருப்பினும் சலுகையில் ரூ.6,099-க்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்து ஸ்டாண்ட் பை மோடில் வைத்தால் 42 நாட்கள் வரை சார்ஜ் நீடிக்கும் திறன் கொண்டது இந்த போன் என டெக்னோ தெரிவித்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.6 இன்ச் திரை அளவு.
  • ஹெச்.டி+ டிஸ்பிளே.
  • இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தும் வசதி.
  • ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளம்.
  • ஆக்டா-கோர் சிப்செட்.
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா.
  • 8 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் ஏஐ கேமராவும் உள்ளது.
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
  • 5000mAh பேட்டரி திறன்.
  • 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் திறன் கொண்டுள்ளது இந்த போன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in