வாட்ஸ்அப்பில் பயனர்கள் தங்கள் கார்ட்டூன் அவதாரை உருவாக்கலாம்: விரைவில் வரும் புதிய அம்சம்

வாட்ஸ்அப்பில் பயனர்கள் தங்கள் கார்ட்டூன் அவதாரை உருவாக்கலாம்: விரைவில் வரும் புதிய அம்சம்
Updated on
1 min read

கலிபோர்னியா: வெகு விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது கார்ட்டூன் அவதாரை அதில் உருவாக்கி, பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கென பிரத்யேக அம்சம் ஒன்றை அந்த தளம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தில் தங்களது அவதாரை உருவாக்கும் அம்சம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் பயனர்கள் தங்கள் அவதாரை சாட் செய்யும்போது ஸ்டிக்கராகவும், வீடியோ கால் அழைப்பின்போது மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது. செட்டிங்ஸ் அடிப்படையில் தானியங்கு முறையில் இந்த அவதாரை வாட்ஸ்அப் ஒவ்வொரு பயனருக்கும் உருவாக்கும் எனத் தெரிகிறது. முன்னதாக, மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிமுகம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் தளமும் அவதார் குறித்து அறிவித்திருந்தது. ஆனால், அப்டேட் எதுவும் கொடுக்கவில்லை. இருந்தாலும் இது விரைவில் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் இரண்டு புதிய அம்சங்களை சோதித்து வருகிறது. அதில், ஒன்று கம்பேனியன் மோட் என்றும், மற்றொன்று Do-நாட்-டிஸ்டர்ப் மோட் என தெரிகிறது. வெகு விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது கார்ட்டூன் அவதாரை அதில் உருவாக்கி, பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதற்கென பிரத்யேக அம்சம் ஒன்றை அந்த தளம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in