ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை & அம்சங்கள்

ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை & அம்சங்கள்
Updated on
1 min read

சென்னை: ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் முன்னதாக கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் 10R 5ஜி பிரைம் ப்ளூ எடிஷன் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அமேசான் தளத்தின் மூலம் இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு 3 மாத காலம் அமேசான் பிரைம் சேவையை இலவசமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர விலையில் இன்னும் பிற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சம் 1,750 ரூபாய் வரை விலையில் தள்ளுபடி இருக்கும் என தெரிகிறது. அதே போல பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ் செய்யும் வசதியும் உள்ளது. பழைய போன்களுக்கு அதிகபட்சம் 15,200 ரூபாய் வரையில் தள்ளுபடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் இந்த போன் வெளியாகியுள்ளது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது.
  • 6.7 இன்ச் திரை அளவு.
  • ஓ.எல்.இ.டி டிஸ்பிளே.
  • மீடியாடெக் டைமன்சிட்டி 8100 மேக்ஸ் சிப்செட்.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமராவும் இடம் பெற்றுள்ளது.
  • இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் அம்சம் கொண்டுள்ளது.
  • 5000mAh திறன் கொண்ட பேட்டரி.
  • 5ஜி இணைப்பு வசதி.
  • இந்த போனின் விலை ரூ.32,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in