

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி C30s ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் பட்ஜெட் விலையில் சந்தையில் அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது C30s போனை இந்திய பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. நேற்று தான் இந்தியாவில் நார்சோ 50i பிரைம் எனும் பட்ஜெட் ரக போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது ரியல்மி.
கருப்பு மற்றும் நீலம் என இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. வரும் 22-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளம் மூலம் இந்த போன் விற்பனையாக உள்ளது. 2ஜிபி + 32ஜிபி மற்றும் 4ஜிபி + 64ஜிபி என இருவேறு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்