15-வது வயதிலும் மக்களைக் கவரும் ஆப்பிள் ஐபாட்!

15-வது வயதிலும் மக்களைக் கவரும் ஆப்பிள் ஐபாட்!
Updated on
1 min read

அக்டோபர் 23, 2001 அன்று ஆப்பிள் துணை நிறுவனரும், முன்னாள் தலைமை அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபாட் என்னும் இசை கேட்கும் சாதனத்தை அறிமுகப்படுத்தினார். இது இசை மீதான மக்களின் மனநிலையை மாற்றியமைத்தது என்றுகூடச் சொல்லலாம்.

ஐபாட் சாதனத்தின் முதல் தலைமுறை 1000 பாடல்களைச் சேமிக்கும் வகையில் 5 ஜி.பி. சேமிப்பானையும், அதைக் கேட்கும் சாதனத்தையும் கொண்டிருந்தது.

இரண்டாவது தலைமுறை தொடுதிரை வசதியோடு, விண்டோஸ் இயங்குபொருளின் உதவியையும் கூடுதலாகப் பெற்றிருந்தது.

இப்போது மூன்று வகையான ஐ-பாட்கள் சந்தையில் உள்ளன. அவை, அதி கச்சித ஐபோட், ஐபாட் நானோ, தொடுதிரை ஐபாட்.

ஐபாட் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளிலேயே, ஆப்பிள் நிறுவனம் 10 லட்சம் ஐபாட்களை விற்று சாதனை படைத்திருந்தது. அதற்கடுத்த ஆண்டின் இறுதியில், 1 கோடி ஐபாட்கள் விற்றுத் தீர்ந்தன. 2010-ன் கடைசியில் 4.2 கோடி ஐபாட்களும், 2015-ல் 27.5 கோடி ஐபாட்களும் விற்பனை ஆகியிருந்தன.

ஜனவரி 2015-ல் ஐபாட் விற்பனை குறித்த தகவல்கள், ஐபோன்களின் விற்பனையைப் பாதிக்கின்றன எனவும், இனிமேல் ஐபாட் விற்பனை குறித்த விவரங்களை வெளியிடப்போவதில்லை என்றும் ஆப்பிள் தெரிவித்தது.

ஆப்பிளின் ஐட்யூன்ஸ் இசை மென்பொருள், நாளாக நாளாக வலிமையாகிக் கொண்டே செல்வதாக துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐபாட் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்த டோனி ஃபேடல் 2010-ல் ஆப்பிளை விட்டு விலகி, நெஸ்ட் லேப்ஸை ஆரம்பித்தார். அந்நிறுவனம் தற்போது கூகுள் வசமுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in