உங்கள் ஸ்மார்ட்போனின் இயக்கம் ஸ்லோ டவுன் ஆகிறதா?- வேகப்படுத்த பயனுள்ள டிப்ஸ்

(கோப்புப்படம்)
(கோப்புப்படம்)
Updated on
2 min read

ஸ்மார்ட்போன்கள் மனிதகுலத்தின் அத்தியாவசிய தேவையாகிவிட்டன. இந்தச் சூழலில் சில ஸ்மார்ட்போன்களின் இயக்கம் சமயங்களில் ஆமை வேகத்தில் மிகவும் ஸ்லோவாக இயங்கும். அதன் இயக்கத்தை வேகப்படுத்தும் சில டிப்ஸ்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஸ்மார்ட்போன் இல்லாததை கற்பனையில் கூட எண்ணிப் பார்த்திட முடியாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போன் அழைப்பு மேற்கொள்ள, இணையத்தில் சர்ஃப் செய்ய, இணையத்தில் உணவு ஆர்டர் செய்ய, முக்கிய கோப்புகளை பாதுகாக்க என ஒரு குட்டி விர்ச்சுவல் நண்பனை போலவே செல்போன்கள் நமக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.

இருந்தாலும் அதீத அளவிலான பயன்பாடு, ஃபைல்களை டவுன்லோடு செய்தல் போன்ற காரணங்களால் சமயங்களில் ஸ்மார்ட்போன்களின் இயக்கம் ஸ்லோவாக இருக்கும். சில நேரங்களில் போன் ஹேங் கூட ஆகிவிடும். அந்த சிக்கலில் இருந்து விடுபட இதோ சில ஸ்மார்ட்டான டிப்ஸ்.

போன் Cache டேட்டாவை நீக்குவது: சமயங்களில் நமது போனின் ரேமில் (RAM) சில Cache-கள் இடம் பெறும். அது கேலரியில் வெளிப்படையாக தெரியாது. இருந்தாலும் அது போனின் மெமரியை ஆட்கொண்டு இருக்கும். உதாரணமாக நாம் பிரவுசரில் ஒரு வலைதளத்தை பயன்படுத்தினால் அடுத்த முறை அதை ஓபன் செய்யவும், வேகமாக லோடாகவும் சில தரவுகளை போன் தானாகவே அதன் நினைவகத்தில் சேமிக்கும். சமயங்களில் போன் ஸ்லோவாக இயங்க இதுகூட ஒரு காரணமாக அமையலாம். அதனால் அதனை நீக்குவது அவசியம். செட்டிங்ஸ் ‘Clear Cache’ ஆப்ஷன் மூலம் இதனை நீக்க முடியும்.

தேவையில்லாத ஆப்களை அகற்றுவது அவசியம்: நமது ஸ்மார்ட்போனில் சில அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்யலாம். அதில் சில தற்காலிக தேவை அல்லது பயன்பாட்டை சார்ந்து இருக்கும். அதனால் அந்த தேவையில்லாத அப்ளிகேஷன்களை அடையாளம் கண்டு அன்-இன்ஸ்டால் செய்வது அவசியம். அன்-இன்ஸ்டால் செய்ய முடியாத அப்ளிகேஷன்களை Disable செய்து விடலாம்.

லேட்டஸ்ட் சாப்ட்வேர்களை பயன்படுத்துவது அவசியம்: ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு என எந்தவித போனாக இருந்தாலும் இயங்குதளம் சார்ந்த அண்மைய சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வது மிகவும் அவசியம். சமயங்களில் சாப்ட்வேர்களை அப்டேட் செய்யாமல் இருப்பது கூட போனின் மந்தமான செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். செட்டிங்ஸில் அப்டேட் குறித்து பயனர்கள் அறிந்து கொள்ளலாம்.

  • அதே போல பழைய ஸ்மார்ட்போன்களில் அண்மைய அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதும் மந்தமான செயல்பாட்டுக்கு வழிவகுக்கும். அதனால் அதில் லைட்டர் எடிஷன் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம். ஃபேஸ்புக் லைட், இன்ஸ்டாகிராம் லைட், கூகுள் கோ போன்ற செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
  • அனிமேஷன் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் போனை வேகப்படுத்தலாம். டெவெலப்பர் ஆப்ஷனை ஆன் செய்வதன் மூலம் இதனை Enable செய்யலாம். இதன் மூலம் ஸ்மார்ட்போன் திரையின் விஷுவல் எபெக்ட்ஸ் குறைக்கப்படும். அதன் மூலம் திரை வேகமாக இயங்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in