

இந்திய நகரங்களில் சுற்றுலா மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ‘ஆடியோ காம்பஸ்’ எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி ஒலி வடிவிலான கதைகள் மூலம் உள்ளூர் சிறப்புகளை அறிமுகம் செய்கிறது.
சுற்றுலாப் பயணிகள் பொதுவாகத் தாங்கள் பார்க்க விரும்பும் இடங்கள் பற்றி இணையத்தில் தகவல்களைச் சேகரிக்கின்றனர். இவர்களுக்கு இன்னும் சிறப்பான சுற்றுலா அனுபவத்தை வழங்கும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி முக்கிய சுற்றுலா நகரங்களின் சிறப்புகளை உள்ளூர் மக்களின் பார்வையில் ஒலி வடிவத்தில் அளிக்கிறது. மேலும் இருப்பிடத்தை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப கதைகளை இது கூறுகிறது. உள்ளூர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாத்துறையின் அதிகாரபூர்வ ஒலி வழிகாட்டியாக இருப்பதாகத் தெரிவிக்கும் இந்தச் செயலி மூலம் 1200-க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் பற்றிய தகவல்களை இதில் தெரிந்துகொள்ளலாம். அடிப்படை சேவை இலவசமானது. ஆனால் கூடுதல் சேவைக்குக் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:> http://www.audiocompass.in/#About