

நாம் சாப்பிடும் உணவில் கொழுப்பு எவ்வளவு, புரோட்டின் எவ்வளவு, கார்போஹைட்ரேட் எவ்வளவு என்பதை இந்த ஸ்கேனர் நமக்கு தெரிவிக்கிறது. இந்த ஸ்கேனரை நமது தொலைபேசியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இணைப்புக் கருவி
காடு, மலை போன்ற இடங்களில் செல்லும்போது செல்போனில் சிக்னல் கிடைக்காததால் தகவல் தெரிவிப்பது கடினம். அதைப் போக்கும் வகையில் இந்தக் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவிக்க முடியும்.
தகவல் தெரிவிக்கும் கருவி
சிறுவர்கள் சைக்கிளில் வெளியிடங்களுக்கு சுற்றிப்பார்க்க செல்வதுண்டு. அவர்கள் போகும் போது கீழே விழுந்து விட்டால் தகவல் தெரிவிப்பதற்கு புதிதாக ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை மொபைலில் இணைத்துக் கொண்டால் நமக்கு தகவலை அளிக்கிறது.
ஸ்மார்ட் கண்ணாடி
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கும் வசதியுடன் புதிய கண்ணாடியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கண்ணாடியை வை-பை மற்றும் புளுடூத் மூலமாக ஸ்நாப் என்ற செயலியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். 10 விநாடிகளுக்கு வீடியோக்களை பதிவு செய்து கொண்டு உடனே அதை செல்போன்களுக்கு அனுப்பி விட முடியும். பல்வேறு வண்ணங்களில் இந்த கண்ணாடி வந்துள்ளதால் மிகப் பெருமளவு வரவேற்பு உள்ளது. இந்தக் கண்ணாடியின் விலை 130 டாலர்.
கண்காணிப்பு ரோபோ
பொதுவாக நம்மை கண்காணிக்க ஒருவர் இருந்தால்தான் நாம் ஒழுங்காக செயல்படுவோம். நம்மை கவனித்துக் கொள்ள புதிய ரோபோ வந்துவிட்டது. இந்த ரோபோவை நம் தலையணைக்கு அருகில் வைத்துவிட்டால் எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதை கண்காணித்து தகவல்களாக சேமித்து வைத்துக் கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் நாம் எவ்வளவு நீர் அருந்துகிறோம் எப்படி பல் துலக்குகிறோம் என்பதையெல்லாம் கண் காணித்து நம் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கிறது.