ஒன்டர்பார்: எஃப். எம், ப்ளூடூத் வசதியுடன் புதிய ஸ்பீக்கர்

ஒன்டர்பார்: எஃப். எம், ப்ளூடூத் வசதியுடன் புதிய ஸ்பீக்கர்
Updated on
1 min read

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் சவுண்டுபார் என்கிற புதிய பொருளை அறிமுகப்படுத்துகிறது. ஒன்டர்பார் என்று குறிப்பிடப்படும் இந்த சவுண்டுபார் மெல்லிய, தரமான வடிவில் சந்தைக்கு வந்துள்ளது.

ரிமோட் கண்ட்ரோல், ஹெட்ஃபோன் இணைப்பு வசதி, எஃப்.எம் ரேடியோ மற்றும் ப்ளூடூத் உள்ளமைக்கப்பட்ட இந்த சவுண்ட்பாரை சுவற்றிலும் மாட்டி வைக்கலாம். எங்கும் எளிதாக நிறுவலாம். 35 எஃப்.எம் சேனல்கள் வரை இதனால் தனது நினைவாற்றலில் சேமித்து வைக்க முடியும். இதன் 8 மீட்டர்கள் தூரம் வரை செயல்படக்கூடிய ப்ளூடூத் வசதி ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் அல்லது தொலைக்காட்சியில் இருந்து இசையை இயக்கிட அனுமதிக்கிறது. AUX இணைப்பு வசதியின் மூலம், தொலைக்காட்சி, DVD கருவி மற்றும் கணினி போன்ற சாதனங்களுடன் இதனை இணைக்கலாம்.

ஒவ்வொன்றும் 5.08 செ.மீ அளவுள்ள இரண்டு ஸ்பீக்கர்களைக் கொண்டு 10W ஒலி சக்தியை வழங்கும் இது தெளிவான குரல் ஒலியைக் கேட்பதையும் உறுதி செய்கிறது.

சவுண்ட்பார், முன்னணி சில்லரை மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இது ஜீப்ரானிக்ஸிடம் இருந்து 1 வருட உத்திரவாதத்துடன் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கருக்கு ரூ. 1616/- என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in