

வீடியோ பகிர்வு சேவையான யூடியூப்பில் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்ட வீடியோக்களும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களைக் கொண்ட சேனல்களும் இருக்கின்றன. ஆனால் இப்படி அமோக ஆதரவு பெற்ற சேனல்களைத்தான் கவனிக்க வேண்டும் என்றில்லை. அதிக உறுப்பினர்களின் ஆதரவு பெறாத சேனல்களிலும்கூட நல்ல வீடியோக்கள் இருக்கலாம்.
அப்படி ஒரு வீடியோ சேனல்தான், ‘கிரேசி போட்டோஷாப் வீடியோ டுடோரியல்’. கிறிஸ்டினா கிரேமர் என்பவர் அந்த சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் மொத்தமே ஏழு வீடியோக்கள்தான் இருக்கின்றன. அதில் உள்ள வீடியோக்கள் ஒளிப்படங்களை போட்டோஷாப் செய்வது தொடர்பான அருமையான விளக்கங்களைக் கொண்டிருக்கின்றன.
மேலதிக விவரங்களுக்கு:>https://www.youtube.com/channel/UCZIcebBcU81BWJLrNA3Yz3g