இது ‘லஞ்ச் டைம்’ வழிகாட்டி!

இது ‘லஞ்ச் டைம்’ வழிகாட்டி!
Updated on
1 min read

அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தை நீங்கள் எப்படிச் செலவிடுகிறீர்கள்? சாப்பிட்டு முடித்த பிறகு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிடுவது என்பது போல உங்கள் பழக்கம் அமைந்திருந்தால் அதை மாற்றிக்கொள்வது நல்லது.

மதிய உணவுப் பழக்கத்தை எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும், எப்படி மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் கேள்விகள் இருந்தால், ‘நோட்டீஸ் போர்டு’ நிறுவனம் உருவாக்கியுள்ள தகவல் வரைபடம் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.

இந்தத் தகவல் வரைபடம், வெற்றிகரமான மனிதர்கள் தங்கள் மதிய உணவு நேரத்தை எப்படிச் செலவிடுகின்றனர் என்பதை விளக்குகிறது.

ஆரோக்கியமான முறையில் சாப்பிடுவது, சற்று கண் அயர்வது ஆகியவற்றில் தொடங்கி, கடந்த வாரச் செயல்பாடுகளை ஆய்வு செய்வது, சிறிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது, புதியவர்களுடன் பழகுவது, உடற்பயிற்சி செய்வது, சொந்த வேலைகளை முடித்துக்கொள்வது என இந்தப் பழக்கங்கள் விரிகின்றன. அலுவலகத்தை விட்டு வெளியே சென்று வருவது, பிடித்தமானவற்றைச் செய்வது மற்றும் புத்தகத்தை எடுத்துப் படிப்பது ஆகிய செயல்களிலும் வெற்றிகரமான மனிதர்கள் மதிய உணவு நேரத்தில் ஈடுபடுவதை இந்தத் தகவல் வரைபடம் விவரிக்கிறது.

உங்கள் மதிய உணவு நேரத்தை உற்சாகமாக்கிக் கொள்ள இதில் உள்ள வழிகளை முயன்று பார்க்கலாம்.

தகவல் வரைபடத்தை காண: >http://bit.ly/2dHIeCq

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in