Published : 18 Aug 2022 04:04 PM
Last Updated : 18 Aug 2022 04:04 PM

ரியல்மி 9i | பட்ஜெட் விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி இந்தியா

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையிலான ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது ரியல்மி நிறுவனம். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

விரைவில் இந்தியாவில் 5ஜி டெலிகாம் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான நிறுவனமான ரியல்மி இப்போது மலிவு விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்வது ரியல்மியின் வழக்கம். அந்த வகையில் இப்போது ரியல்மி 9i 5ஜி இந்திய சந்தையில் களம் கண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்.
  • 6.6 இன்ச் திரை அளவு கொண்ட ஃபுள் ஹெச்.டி டிஸ்பிளே.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
  • 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்.
  • 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்.
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
  • 8 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இந்த போனில் உள்ளது.
  • 5,000mAh பேட்டரி.
  • 18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்.
  • டைப் சி சார்ஜிங் போர்ட்.
  • 5ஜி பேண்ட் சப்போர்ட்.

லேசர் லைட் டிசைனை கொண்டுள்ளது இந்த போனின் பின்பக்க பேனல். மோட்டோ ஜி52, போக்கோ எம்4 புரோ 5ஜி, ரெட்மி நோட் 11டி 5ஜி போன்ற போன்களுடன் இது ஒப்பிட்டு பேசப்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 4ஜிபி வேரியண்ட் விலை ரூ.14,999-க்கும், 6ஜிபி வேரியண்ட் விலை ரூ.16,999-க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக சலுகையும் இதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x